தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்

தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்.

தமிழர்களின் இரண்டாயிரம் வருட பகையான ஆரியம் தமிழர்களை விழுங்க எத்தனித்த முயற்சிதான் தமிழ் மொழியை அழித்து இந்தி என்னும் ஆதிக்க மொழியைத் திணித்த நிகழ்வாகும். இதை சரியாக புரிந்து கொண்ட தமிழறிஞர்கள், திராவிட இயக்க தீரர்கள், தமிழ் சமயப் பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழினம் காக்க மொழிப்போரில் ஒற்றுமையுடன் ஈடுபட்டனர்.

இந்த மொழிப்போரில் நடராசன் தாளமுத்து தொடங்கி எண்ணற்ற தமிழ் மறவர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்தனர். ஆனால் பகைவர்கள் இந்த தீரமிக்க மொழிப் போராட்டத்தை, வெறுமனே இந்தி எனும் ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாக சுருக்க நினைக்கிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்கள் அனைவருடையது.

அதோடு முன்பைவிட அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் ஆரியம் தமிழ் உள்ளிட்ட தேசிய இனங்களை அழித்து ஒற்றை பண்பாடு,ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என்கிற பாசிச போக்கை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் அதனை தடுப்பது ஒன்றே தங்களது உயிரைக் கொடுத்து இந்த மொழியை காத்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

1930-களில் தொடங்கிய மொழிப்போராட்டம் இன்னும் முடியவில்லை என்பதை நினைவில் கொண்டு மொழி உரிமையோடு இன உரிமை காக்க மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் இந்த நாளில் உறுதிமொழி ஏற்போம். வா தமிழா!

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply