முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை தகர்ததெறிந்த தமிழின விரோத இலங்கையின் தூதரகம் முற்றுகை

தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு தகர்ததெறிந்துள்ளது.இலங்கை அரசின் இந்த தமிழின விரோத செயலை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று (11-01-2021) காலை நடைபெற்றது.மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்!

Leave a Reply