சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டம்

கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி, ஈரோடு மாவட்ட மருத்துவ கல்லூரியாக செயல்படும் பெருந்துறை IRT மருத்துவ கல்லூரி போன்றவற்றின் கல்வி கட்டணங்களை, அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிர்ணயிக்க கோரியும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க கோரியும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக, இன்று (10.01 2020 ஞாயிறு) காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.மே பதினேழு இயக்கம்9884072010

Leave a Reply