அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!

அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் எழும்ப, தேர்வை ரத்து செய்யப்பட்டது மீண்டும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று உறுதியளித்தார். அதனை மீறும் விதமாக தற்போது மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு பதவியேற்றது முதலே ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தி மொழியை மட்டும் வளர்ப்பதும் தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிப்பதும் தொடர்கதையாக உள்ளது. அதே போல் இந்திய ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிக்கும் விதமாக பணியிடங்களை முறைகேடாக வட இந்தியர்களை கொண்டு மோடி அரசு நிரப்பி வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழியை, தமிழர்களை புறக்கணிக்கும் வேலையை தமிழர் விரோத மோடி அரசு செய்து வருகிறது. இது தமிழர்கள் மீதான ஆரியர்களின் வன்மத்தையே காட்டுகிறது.

அஞ்சலகங்கள் ஆங்கிலம், இந்தி தெரிய ஏழை எளிய மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஏதோ ஒருவகையில் செயல்படுகின்றன. அப்படியான இடத்தில், மக்களின் மொழியை அறிந்தவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். அதற்கு அஞ்சல் தேர்வுகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும். எனவே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து துறைகளின் தேர்வுகளும் தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற்று, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அஞ்சல் தேர்வு நடத்துவதற்கான புதிய அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply