விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாய போராளிகளுக்கு வீட்டிலிருந்தே குடும்பத்தோடு சுடரேற்றி வீரவணக்க நிகழ்வு

ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று கொடுங்கோலன் ஜார் மன்னனுக்கு எதிராக ரசியாவின் வெகுமக்கள் வெகுண்டெழுந்ததைப்போல டெல்லியில் கொடுங்கோன்மை இந்துத்துவ மோடி அரசுக்கு எதிராக விவசாயத்தை காப்பாற்ற கடுங்குளிரில் விவசாயிகள் 44ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராடும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு பக்கம் காலம் தாழ்த்துவதும், மறுபக்கம் விவசாய போராட்டத்தில் பிரிவினைவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதுமாக பாசிச இந்துத்துவ மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடுங்குளிர்,மழை மற்றும் இந்துத்துவ மோடி அரசின் செயலுக்கு எதிராக தனது உயிரை மாய்த்தல் என்று இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை இந்தப் போராட்டத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆகவே வருகிற சனவரி 10-ஆம் தேதி மாலை 7 மணிக்கு விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாய போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு வீட்டிலிருந்தே குடும்பத்தோடு சுடரேற்றி நடத்துமாறு அனைவரையும் மே17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

உணவளிக்கும் போராளி உழவர்களுக்கு உறுதுணையாய் நிற்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply