விவசாய விரோத 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சையில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

விவசாய விரோத 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், டிசம்பர் 29 அன்று தஞ்சையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பங்கேற்கும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மே பதினேழு இயக்கம் டிசம்பர் 29 அன்று தஞ்சையில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply