புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முற்றுகை

கார்பரேட் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு வரும் உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (09-12-2020) சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முற்றுகையிடப்பட்டது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் உட்பட தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழர் விடுதலை கழகம் போன்ற அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

Leave a Reply