பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம்

பட்டியல் இன ( SC) பள்ளி மாணவர்கள் 60லட்சம் பேருக்கு கிடைக்கவேண்டிய கல்வி உதவித்தொகையை இரத்து செய்த இந்துத்துவ மோடி அரசை கண்டிக்கின்றோம் – மே17 இயக்கம்

ஓவ்வொரு மாநிலங்களிலும் 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியல் இன (SC) பள்ளி மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து உயர்கல்விக்கு போக வழிவகை செய்ய ஏதுவாக கல்வி உதவித்தொகையினை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிவந்தது. இதனை தற்போது பிஜேபியின் மோடி அரசு நிறுத்தியிருக்கிறது. இதன்மூலம் இந்திய ஒன்றியத்திலிருக்கும் 60லட்சம் பட்டியலின மாணவர்கள் கல்வி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மோடி அரசு பதவியேற்ற 2014லிருந்து உயர்கல்வியில் பட்டியல் இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை 55% அதாவது பாதிக்கும் கீழ் குறைத்துவிட்டது. நமக்கு நினைவிருக்கலாம் ஜதரபாத்தில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்துபோன ரோகித் வெமுலா மற்றும் அவரது நண்பர்களின் போராட்டமே தடுத்து நிறுத்தப்பட்ட தங்களது கல்விஉதவித்தொகையான 25000ரூபாயை தரச்சொல்லித்தான் நடந்தது. அதன் விளைவாகவே அவர்கள் கல்லூரியைவிட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

ஒரு பக்கம் புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நவினக்குலக்கல்வியை கல்வியிலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் ஒருவேலையை செய்யும் மோடி அரசு அதையும் மீறி போராடி படிக்க வருபவர்களுக்கு கல்வி உதவித்தொகையினை நிறுத்தி அவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கிறது.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட(OBC) மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறிக்கும் மோடி அரசு, இப்போது பட்டியலின மக்களின் கல்வியில் கைவைத்திருக்கிறது. இவ்வளவு சதிவேலைகள் செய்யும் இந்துத்துவ மோடி அரசு உயர்சாதிகளுக்கு (பார்ப்பனர்கள்) 10% இடஒதுக்கீட்டை அவர்கள் கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கிறது.

இந்துத்துவ மோடி அரசின் பட்டியலின மற்றும் பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான இப்படியான நடவடிக்கைகள் என்பது பார்ப்பன அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயலே ஆகும். ஆகவே இந்துத்துவ மோடி அரசின் இந்த சதிதிட்டத்தை பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒரணியில் நின்று எதிர்த்தால் மட்டுமே வென்றாக முடியும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply