தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நாள் கொண்டாடியதற்காக சிறையிலடைக்கப்பட்ட தமிழக மக்கள் முன்னணியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யக் கோரி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (07-11-2020) காலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஐயா குணங்குடி ஹனீபா, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் குமரன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Leave a Reply