பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் குடந்தை அரசன் சந்திப்பு

தமிழகத்தை எப்படியாகினும் கலவர காடாக மாற்றி விடவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தமிழகமெங்கும் பரப்பி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை நவம்பர் 6 ஆம் தேதியிலிருந்து வேல் யாத்திரை என்கிற பெயரில் ஒரு கலவர நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனை தமிழகத்தில் இருக்கிற முற்போக்கு சக்திகள் அனைவரும் இணைந்து தடுத்திட வேண்டும் என்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் நேற்று (04.11.2020) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை கூட்டமைப்பின் சார்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசனும் அவர்களும் சந்தித்து பேசினார்கள்.

Leave a Reply