தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

தமிழக அரசு கொண்டு வந்திருக்கிற தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் விரிவாக்குதல் சட்டத்திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் – மே17 இயக்கம்

தமிழகத்தில் எண்ணற்ற வெளிநாட்டு தொழிற்சாலைகளின் முதலாளிகள் தொழில்கள் தொடங்குகிறார்கள் என்கிற காரணத்தைக் கொண்டு, தமிழ்நாட்டு நிலங்களை தான்தோன்றித்தனமாக எவர் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற வகையில் தமிழக அரசு நேற்று ஒரு சட்டத் திருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.

அதாவது புதிய தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் 2020. அதன்படி இனி தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்கும் முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளுக்கு தேவையான 120 ஏக்கர் நிலங்களை அரசிடம் அனுமதி பெறாமலேயே எடுத்துக்கொள்ளலாம் என்றும், ஏற்கனவே தொழில்கள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் விரிவாக்கத்திற்காக நூறு ஏக்கர் நிலங்களை அரசிடம் அனுமதி பெறாமலேயே சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் தமிழர்களின் நிலம் கேள்விகேட்பாரன்றி எவ்வளவு வேண்டுமானாலும் எவர் வேம்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு புதிய விதியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே விவசாய சட்டங்களின் மூலம் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியே அனுப்பும் வேலை ஒருபக்கம் நடக்கிறது என்றால், இப்போது அவர்களிடமிருந்து நிலங்களையும் பிடுங்கிக் கொண்டால் உள்நாட்டிலேயே அகதியாக மாறும் நிலை உருவாகும். ஆகவே இந்த மோசமான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply