விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தில் மே17 இயக்கமும் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை (24-10-2020) நடத்தும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தில் மே17 இயக்கமும் பங்கேற்பு.

மனிதர்களுக்குள் சமத்துவமின்மையை உருவாக்கி பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆரியர்களால் எழுதப்பட்ட ‘மனுஸ்மிருதி’என்னும் அநீதியான நூலை எப்படியேனும் இந்திய ஒன்றியத்தில் இருக்கும் பார்ப்பனரல்லாத ஏனைய மக்கள் மீது திணித்து விட வேண்டுமென்று இந்துத்துவ வெறியர்கள் பெருமுயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அந்த வெறிக்கும்பல்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருப்பதை வாய்ப்பாகக் கொண்டு முன்னெப்போதையும்விட ‘மனு’ நூலை திணிப்பதில் வேகமாக இயங்குகிறார்கள்.

இப்படியான ஆபத்தான கால கட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை 24.10.2020 பெண்களை இழிவுபடுத்தும், மனிதர்களுக்குள் சமத்துவமின்மையை உருவாக்கும் மனு சாஸ்திர தடை கோரும் போராட்டத்தை மாவட்ட தலைநகரங்கள் தோறும் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் அருமை தோழர் முனைவர். தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த போராட்டத்திற்கு மே17 இயக்கம் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மே 17 இயக்க தோழர்கள் ஆங்காங்கே நடைபெறும் இந்த போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply