தமிழர் விரோத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை

நீட் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழர் விரோத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து, இன்று (23-10-2020) காலை, சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கமும் பங்கெடுத்தது. இந்த போராட்டத்திற்கு, தபெதிக சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் அவர்கள் தலைமை தாங்கினார். முற்றுகையில் ஈடுபட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply