தோழர். இராசேஸ்வரி மற்றும் தோழர் சுகந்தி ஆகியோரின் சாதிவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

- in கடலூர், சாதி

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்வரி, மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோரை பஞ்சாயத்து கூட்டத்தில் தரையில் அமர வைத்து தீண்டாமையைக் கடைபிடித்த செயலை கண்டிக்கும் விதமாகவும். தோழர். இராசேஸ்வரி மற்றும் தோழர் சுகந்தி ஆகியோரின் நியாயமான சாதிவெறிக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கவும் அவர்களின் இல்லத்திற்கு இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் சென்றனர்.

இதில் மே-17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர். இளமாறன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தைஅரசன்,
தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் தோழர். சி.பேரறிவாளன்,
மற்றும் தோழர்கள் நேரில் சென்று பெரியாரிய தோழர்கள் துணை நிற்போமென்று உறுதியும் ஆதரவும் கொடுத்தனர்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply