மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் முற்றுகை

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக்கோரி, இன்று (26-09-2020) காலையில், இந்திய ஒன்றிய அரசு நிறுவனமான புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் மே பதினேழு இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. அப்போது, விவசாய விரோத சட்ட நகல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இதில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஸ்ரீதர், SDPI கட்சியின் புதுவை மாநில நகர செயலாளர் தோழர் பத்ருதீன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கோகுல் காந்தி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் தோழர் தீனா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வீரமோகன், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முருகானந்தம், மக்கள் அதிகாரத்தின் தோழர் சாந்தகுமார், மக்கள் மனிதநேய செயற்பாட்டாளர் தோழர் பஷீர் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply