விவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் விவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று 23.09.2020 புதன்கிழமை காலையில் 10 மணிக்கு இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, திராவிடர் விடுதலை கழக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் கந்தன்,போரூர் சிங்காரவேலர் பெரியார் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தோழர் அப்துல் ரசாக் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் விவசாய விரோத மசோதாக்களின் நகல் தீவைத்து கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply