தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மே இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (17-09-2020) காலை 10:30 மணியளவில், பெரியார் கடைசியாக உரையாற்றிய சென்னை தியாகராயா நகரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மே இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இன்று சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர்களும் மணக்கோலத்தில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பறையிசை முழங்க எண்ணற்ற தோழர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தந்தைப் பெரியாரின் அரசியல் முழக்கங்களை முழக்கமிட்டனர்.

Leave a Reply