தமிழகத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு படை அதிகாரிகள் இந்தி தெரியாதவர்களை அவமானப்படுத்துவது குறித்து பத்திரிகையில் வெளியான கட்டுரை

தமிழகத்தில் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து இந்திய அரசின் பாதுகாப்பு படை அதிகாரிகள் வரம்புமீறி இந்தியிலேயே பேசுவதும் இந்தி தெரியாதவர்களை அவமானப்படுத்துவமாக இருக்கிற செயல் சமீபத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து விரிவான கட்டுரை ஒன்று இன்றைய 09.09.20 புதன்கிழமை ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் வந்திருக்கிறது. அதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பேட்டியும் வெளியாகியிருக்கிறது. தோழர் பேச்சின் சுருக்கமான தமிழாக்கம்.

”விமான நிலையங்களில் கொடுக்கப்படும் அற்விப்புகள் பெரும்பாலும் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை தான் அதிகமிருக்கும். எதிர்பாராத விதமாக ஏதேனும் அவசரமென்றால் பயணிகள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள அந்த அறிவிப்புகள் பயன்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த அறிவுப்புகளை பயணிகளுக்கு புரியாத மொழியில் தான் கொடுப்போமென்பது எதற்காக?

இந்தி பேசும் மாநில பயணிகளை போலத்தானே தமிழ் பேசும் பயணிகளும் முறையான விமான கட்டணம் செலுத்தி பயணிக்கிறார்கள். தமிழர்களிடம் மட்டும் மொழி பாகுபாடு பார்ப்பது எதனால்? தமிழகத்தில் இயங்கும் விமானத்தில்/ விமானநிலையங்களில் அறிவிப்புகள் தமிழில் இருப்பது தானே நியாயம்.

சிங்கப்பூர் விமானத்தில் மலாய், மாண்டரின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிவிப்புகள் உள்ளன. அரபு எமிரேட்ஸ் விமானங்களில் தமிழில் உணவு பட்டியலே தருகிறார்கள் எனும் போது இந்திய விமானங்களுக்கு அதைச் செய்வதில் ஏன் கடினம்? விமானம் புறப்படும் மாநிலத்தின் மொழியையும், அது தரையிறங்கப் போகும் மொழியையும் சேர்க்கலாம், இந்த அம்சம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு மணி நேர விமானங்களுக்கு கூட கிடைக்கிறது எனும் போது இங்கு கிடைப்பதில் என்ன சிக்கல்?

இதற்கு தனியாக ஏதுவும் செய்யத்தேவையில்லை. விமான நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் எனும்போது, அந்தந்த பகுதிக்கு அந்தந்த பகுதி மொழி தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தினாலே போதுமானது தான். குறைந்தபட்சம் நடைமுறை விளக்கங்களையாவது வட்டார மொழிகளில் சொல்லுவதற்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதுமானது அதை எதையும் செய்யாமல் வேண்டுமென்றே விமானத்திலும் விமானநிலையத்திலும் வேற்றுமொழிக்காரர்களை குறிப்பாக இந்தி தெரிந்தவர்களை மட்டும் பணிக்கு அமர்த்துவது என்பதெல்லாம் இந்தியை புகுத்துவது என்பதற்காகத்தான்.

ஆகவே அந்தந்த பகுதி விமான நிலையங்களிலும் சரி விமானத்திலும் சரி அந்தந்த பகுதி மொழிகளை கட்டாயமாக்குவதே இதற்கு தீர்வு”

முழுமையான கட்டுரையை படிக்க :

https://www.newindianexpress.com/cities/chennai/2020/sep/09/talking-turbulence-2194254.html

Leave a Reply