பொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம்

பொய் வழக்கு போடும் அரசுகளையும், அதிகாரிகளையும் தண்டிக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்படவேண்டுமென்ற டாக்டர் கபில்கான் கருத்துக்கு வலுசேர்ப்போம் – மே 17 இயக்கம்

உத்திரபிரதேச மருத்துவமனையில் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் 96குழந்தைகள் இறந்து போனதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதன் காரணமாக டாக்டர் கபில்கான் என்பவரை உ.பி அரசு பொய் வழக்கு போட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது.இதனை எதிர்த்து அவர் அலகபாத் உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு நடந்த வாதத்தின் அடிப்படையில் கடந்த செப் 01அன்று இவர் குற்றமற்றவர் இவர் மீது பொய்யாக தேசப்பாதுகாப்பு சட்டம் உ.பி அரசால் போடப்பட்டிருக்கிறது என்றுக்கூறி இவரை விடுதலை செய்து விட்டார்கள். வெளியில் வந்தவர் இந்தியாவில் பொய்வழக்கு போடும் அதிகாரிகளையும்,அரசுகளையும் தண்டிக்கும் வகையில் சட்டமியற்றப்படவேண்டும். அப்போது தான் பொய் வழக்குகள் குறையும் என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். https://www.hindustantimes.com/columns/india-needs-a-law-to-compensate-the-wrongly-imprisoned/story-290JbbIt6mEAvnFxkfzYnL.html

டாக்டர் கபில்கானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் காலங்காலமாக அரசை நோக்கியும், அதிகாரத்தை நோக்கியும் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் இப்படி பொய்வழக்கு போட்டுத்தான் ஒடுக்குகிறார்கள். ஒருகட்டத்தில் நீதிமன்றம் வழியாக பொய்வழக்கு என்று உறுதிசெய்யப்பட்டாலும் அதுவரை அவரோ அவரது குடும்பமோ அனுபவித்த சிறைவாசம் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு என்ன ஈடு, அதேபோல அவர் மீது பொய்வழக்கு போட்டவர்களுக்கும் இந்திய தண்டனைசட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் கிடையாது.

இந்த தைரியத்தில் தான் அரசுகள் பொய் வழக்குகளை போட்டுவருகிறது. இல்லையேல் இந்திய சிறைகளில் 4,78,600பேர் எந்தவித குற்றமும் நிருபிக்கப்படாமல் வெறும் விசாரணைகைதிகளாக இருப்பார்களா? இப்படி விசாரணை கைதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலும் ஏழைகள் தான். குறிப்பாக இந்திய சிறைகளிலுள்ள விசாரணை கைதிகளில் 64% தாழ்த்தப்பட்டவர்கள், 21.7% பேர் பழங்குடிகள், 30%பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

ஆகவேதான் டாக்டர் கபில் கானின் கருத்துக்கு வலுசேர்ப்பது அவசியம்.யாரோ ஒருவர் தானே பாதிக்கப்படுகிறார் நமக்கென்ன என்று இருந்தால் நாளை நீங்களும் பொய்வழக்கின் கீழ் கைது செய்யப்படும் சூழல் உருவாகும். ஏனென்றால் மோடி ஆட்சியில் இனிவரும் காலங்கள் மிகக் கொடுரமானதாக இருக்கப்போகிறது. அதை எதிர்த்து உங்கள் சுட்டுவிரலை நீட்டினாலே நீங்கள் தேசத்துரோகியாக மாற்றப்படலாம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply