மாலி போராட்டம் சொல்லும் செய்தி

மாலி போராட்டம் சொல்லும் செய்தி

ஒரு நாட்டின் புவியியல் அமைப்பும், அதன் அபிரிமிதமான வளமும் எப்படி அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்குமோ, அதே அளவு தீமைக்கும் வழிவகுக்கும் என்பது ஆப்பிரிக்கவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆப்பிரிக்காவை பொறுத்தவரை தங்கச்சுரங்கம் இருக்கும் பகுதி. அதனை எப்படியாகினும் கொள்ளையடித்து விட வேண்டுமென்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆசைக்கு பலியான ஆப்பிரிக்க மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!

கல்வியறிவு இல்லாமை, சுகாதாரமின்மை வேலைவாய்ப்பின்மை போன்ற அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு என ஆப்பிரிக்காவெங்கும் தாண்டவமாடும் வறுமை அங்கு பல போராளி குழுக்கள் உருவாகவும், போலி குழுக்களை தனது நன்மைக்காக மேற்குலகம் உருவாக்குவதுமாக கடந்த அரை நூற்றாண்டாக பதட்டம் நிறைந்த பகுதியாக ஆப்பிரிக்காவை வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் மாலியில் உள்நாட்டு போராட்டம் தற்போது தீவிரமடைந்திருக்கிறது.

எந்தளவுக்கு என்றால் மாலியின் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கைட்டாவையும் பிரதமரையும் (இணைப்பு படம் 1இல் இருப்பவர்கள்) கைது செய்து அவர்களை வீட்டுச்சிறையில் வைத்து ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதென்று அவர் வாயாலேயே சொல்லவைத்திருக்கிறார்கள்,.சரி இந்த ஆட்சி சரியில்லையென்றும் அவர்கள் பதவி விலகவேண்டுமென்றுதானே எதிர்கட்சிகள் அனைவரையும் அங்குள்ள ஜீன் 5 என்ற இயக்கம் ஒருங்கிணைத்தது. இப்போது அதிபரும் பதவி விலகி விட்டார். போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஜனநாயக முறையில் மறுதேர்தல் நடத்துவோமென்று ஆப்பிரிக்க கூட்டமைப்பு கேட்டால் அதற்கு பதிலேதுமில்லாமல் போராட்டம் திக்கும் தெரியாமல் திசையும் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இதில் கூடுதலாக கவனிக்கவேண்டிய இரண்டு செய்திகள் உள்ளது. 1) இவ்வளவு பெரிய போராட்டம் நடந்து மாலியின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியிருக்கிறது.ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கங்களுக்கு இதனால் ஒரு பாதிப்புமில்லை.

2) சமீபத்தில் தான் மாலி சீனாவின் கனவு திட்டமான ’ஒன் பெல்ட் ஒன் ரோடு ‘ திட்டத்தில் இணைந்திருக்கிறது. இவையனைத்தையும் சேர்த்து பார்த்தால் இன்றைய மாலி மக்கள் போராட்டத்த்ற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

மக்களின் நியாயமான அரசுக்கு எதிரான கோபத்தை சாதியவாதிகளும், மதவாதிகளும், முதலாளித்துவ நாடுகளும் எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன என்று புரிந்துகொள்ள இந்த மாலியின் போராட்டம் நமக்கு பயன்படும். மனிதன் மீதான வேறுபாடுகளை மூலதனமாக்கி வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ அரசியலுக்கு, எதிராக மக்கள் விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply