அநீதிக்கு எதிராக போராடி வென்ற ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தோழர் அமிர்தம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வாழ்த்துகள்

- in சமூகநீதி, சாதி

கடந்த வாரம் இந்திய ஒன்றியம் முழுவதும் தேசப்பற்று பொங்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தந்த பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் ஆகியோரால் கொடி ஏற்றப்பட்டது.

ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆத்துப்பக்கத்தில் பட்டியலினத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அமிர்தம் அவர்களை கொடி ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் அங்கிருந்த ஆதிக்க சாதியினர். இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்து எந்த இடத்தில் அவரை கொடியேற்றக்கூடாது என்று சொன்னார்களோ அதே இடத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று அம்மையார் திருமதி அமிர்தம் அவர்கள் கொடி ஏற்றினார்.

அண்ணல் அம்பேத்கர் தான் சொல்லுவார் “சொந்த நாட்டுமக்களை அடிமையாக நடத்தும் ஜாதி இந்துக்கள்,வெள்ளைக்காரனிடம் விடுதலை கேட்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம் “என்று. அதேபோல சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாதிய இழிவை அகற்ற உரிய சட்ட நடவடிக்கை இல்லை என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். சாதிய ஏற்றதாழ்வுக்கு கடுமையான சட்டங்களும், அதை விட அதிகப்படியான சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே, இதுபோன்ற கொடூரம் இனியும் நடக்காமல் தடுக்க வழியாகும்.

இந்திய ஒன்றியத்தின் கீழ் வாழும் அனைத்து மக்களும் நாள்தோறும் போராடித்தான் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கும்பொழுது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடி வென்ற
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தோழர் அமிர்தம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது மே பதினேழு இயக்கம்.

Leave a Reply