பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரமும் அம்பலமான பிஜேபியின் சதி செயல்களும்

பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரமும் அம்பலமான பிஜேபியின் சதி செயல்களும்

குடியுரிமை திருத்தச்சட்டமென்ற பெயரில் இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாடற்றவர்களாக ஆக்கும் சட்டத்தை மோடி அரசு நாடெங்கும் அறிவித்தது. இதன்விளைவாக நாடே போராட்ட களமானது. இந்த நிலையில் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில் தீடிரென்று சாஹின் பாக் என்ற இடத்தில் சாஹத் அலி என்பவர் தலைமையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து காத்திருப்பு போராட்டத்தை சில நூறு பேர் ஆரம்பித்தனர். இது காட்டுத்தீயாக பரவி போராட்டகளத்தின் மையமாக மாறியது. மேலும் நாடுமுழுவதும் இதே போல பல்நூறு சாஹின் பாக்குகள் தன்னெழுச்சியாக உருவானது.

ஆனால் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சாஹின் பாக்கில் நாட்கள் செல்லச் செல்ல போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் போக்கு மாறியது. தேவையில்லாமல் சர்சைக்குள்ளாகும் விதத்தில் பேசுவது என அதன் போக்கு மாறுவதை கண்ட உண்மையான இஸ்லாமியர்கள் போராட்டத்திலிருந்து விலகிவிட்டனர். ஆனால் பிஜேபியோ ஆம் ஆத்மியோ இந்த போராட்டத்தை வெவ்வெறு வழிகளில் இந்துகளிடம் சமூக வலைதளங்களில் பரப்பி ஓட்டுக்களாக மாற்றினார்கள். அப்படியும் பிஜேபியால் டெல்லி தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை என்றவுடன் இறுதியில் பிஜேபியின் கபில் மிஸ்ரா தலைமையில் மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மிகமுக்கியமான போராட்ட மையமான சாஹின் பாக் போராட்டத்தை ஒருங்கினைத்த ஒருவருக்கும் சிறு கீறல் கூட இல்லை என்பது அப்போதே பலத்த சந்தேகத்தை எழுப்பியது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆகஸ்ட்15ஆம் தேதி சாஹின் பாக் போராட்டத்தை ஒருங்கிணைத்த சாஹித் அலி உள்ளிட்ட 100பேர் பிஜேபியில் இணைந்துவிட்டனர்.(பார்க்க இணைப்பு 01) அது மட்டுமில்லாமல் இந்த சாஹித் அலி என்பவர் இராஷ்ட்ரிய உல்மா கவுன்சிலில் என்ற அமைப்பின் செயலாளாராக இருக்கிறார். (பார்க்க இணைப்பு 02) இந்த இராஷ்ட்ரிய உல்மா கவுன்சில் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான அமைப்பு.

இப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான அமைப்பின் செயலாளரின் துணையோடு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பிஜேபியின் டெல்லி தேர்தலுக்கு பயன்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த போராட்டம் எல்லா மாநிலங்களிலும் பரவி விட்டது. எனவே அதனை ஒடுக்க தனது ஆட்கள் தவிர்த்து ஏனைய இஸ்லாமியர்களை தனது கூலிப்படையை வைத்து கலவரத்தின் மூலம் கொன்று குவித்து விட்டார்கள். இன்று வெளிப்படையாக தனது மறைமுக அடியாட்களை தங்களது கட்சிக்குள்ளேயே சேர்த்துக்கொண்டார்கள்.

இப்படித்தான் கடந்த ஒரு நூற்றாண்டாகவே பிஜேபி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கலவரங்களின் மூலம் சண்டை மூட்டுதல் மூலமும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இந்த சதிக்கும்பலை தமிழகம் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும். அதுவே தமிழகத்திற்கு ஒவ்வொரு தமிழனும் செய்யும் கடமையாகும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply