கேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்

கேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்- மே 17 இயக்கம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இராஜமலை தேயிலை தோட்டத்தில் வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மாட்டிக்கொண்டனர்.

இந்த குடும்பங்களில் நிலையென்னவென்று இதுவரை தெரியாதளவுக்கு அங்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. மீட்பு பணியில் கேரள அரசு துரிதமாக செயல்பட்டாலும் பருவநிலை பிரச்சனையால் மீட்பு பணிகளில் தாமதம் ஆவதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் குடும்பங்களின் நிலை என்னவென்று தெரியாமல் தமிழகத்தில் கோவில்பட்டி கயத்தாறு துத்துக்குடி போன்ற இடங்களில் இருக்கும் அவர்களது உறவினர்கள் மிகுந்த மனவேதனை அடைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழக அரசு இந்த விஷயத்தில் கேரளா அரசோடு இணைந்து துரிதமாக செயல்பட்டு எஞ்சியிருக்கிற தமிழர்களை உடனடியாக மீட்டு தமிழகத்தில் இருக்கும் அவர்களின் உறவினர்களோடு சேர்க்க வேண்டும். மேலும் இதுபோல் இனி எங்குமே நடக்காமல் இருக்க வெளிமாநிலத்தில் வேலைக்கு செல்லும் தமிழர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் குறித்து கவனிக்க தமிழக அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply