துரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா

துரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா

ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஒன்றைரை மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டங்களில் இதுவரை 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென்று அரசு சொல்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவு இன்னும் அதிகமென்று போராட்டகாரர்கள் சொல்கிறார்கள். இந்த போராட்டத்திற்கான தொடக்கபுள்ளி என்பது கடந்த ஜீன் 29ஆம் தேதி எத்தியோப்பியாவின் விடுதலை பாடகர் 34வயதான ஹட்சலு ஹுண்டசோ (Hachalu Hundessa) எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் வைத்து தற்போதய அபி அஹமட் (Abiy Ahmed) அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தான் போராட்டத்தின் தொடக்கம்.

இத்துனைக்கும் எத்தியோப்பியாவில் 2018 ஆம் ஆண்டு அமெரிக்க சார்பு அரசை வீழ்த்தி தற்போதைய அபி அஹமட் (Abiy Ahmed) ஆட்சியை கொண்டுவந்ததில் பாடகர் ஹட்சலுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இவரின் துணையோடு ஆட்சியை பிடித்த அஹமத் பின்னர் தனது சொந்த மக்களுக்கு முந்தைய அரசு செய்த அதே துரோகத்தை செய்ய ஆரம்பித்தார். எத்தியோப்பியாவின் வளங்களை தனியார்மயமாக்கி வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்றார். இதனால் யாரெல்லாம் இவருக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்களே எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதனை நயவஞ்சகமாக சமாளிக்க எதிர்ப்பாளர்களுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கினார். அதனையும் மீறி விடுதலை பாடகர் ஹட்சலு அரச எதிர்ப்பில் முன்னனியில் இருந்ததை வீழ்த்த ஹட்சலு குறித்து போலியான உண்மைக்கு புறப்பான செய்திகளை தனது கூலியாட்களை வைத்து பரப்பி அரசுக்கு எதிரானவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கினார். இதனால் அரசு எதிர்ப்பாளர்களின் பலம் குறைந்த்து குறிப்பாக விடுதலை பாடகன் ஹட்சலுவை தனிமைப்படுத்தினார்கள். இறுதியில் விடுதலை பாடகனை எத்தியோப்பியாவின் தலைநகரில் வைத்து சுட்டு வீழ்த்தியது பாசிச எகாதிபத்திய அரசு.

ஆனால் மக்கள் விடுதலை பாடகனோடு இணைந்து நிற்கிறார்கள் என்ற உண்மை புரியாமல் எத்தியோப்பியாவின் அரசும் அவனின் கூலி படையும் தற்போது போராட்டத்தை அடக்க முடியாமல் தினறி வருகிறது.

எத்தியோப்பியாவின் போராட்டங்கரார்கள் இந்த உலகுகத்திற்கும் ஒடுக்குமுறையாளார்களுக்கும் அதன் கூலிபடைகளுக்கும் ஒன்றை தெளிவாக சொல்கிறார்கள்.அது ‘ எங்களை நீங்கள் கொல்லலாம். ஆனால் எங்களை உங்களால் தடுக்கவியலாது’ என்பது தான்.

எத்தியோப்பியா மக்கள் போராட்டத்திலிருந்து பாடம் கற்போம். அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அதன் கூலியாட்களுக்கு எதிராகவும் சமரசமின்றி நம் மண்னை காக்க நிற்போம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply