ஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு

ஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு

தமிழன் இந்து, முருகன் இந்து கடவுள், தமிழ் கடவுள் சமஸ்கிருத கடவுள் என்ற பரிவினையெல்லாம் கிடையாது இதுவெல்லாம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் சமீப காலங்களில் தமிழர்களிடத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவேண்டுமென்பதற்காக சொல்லிவரும் பித்தலாட்டங்கள். ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழையும் தமிழர்களையும் புறக்கணிக்கும் பிஜேபி அதை மறைக்க நாமெல்லாம் இந்து என்று ஒரு போலி கட்டமைப்பை தமிழர்கள் மீது சுமத்துகிறது. உதாரணமாக
ஈழத்தில் தமிழர்களின் கோவில்கள் (பிஜேபியின் கூற்றுப்படி) இந்துகோவில்கள் ஆயிரக்கணக்கில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது குறித்து இன்றுவரை பிஜேபி ஆர்.எஸ்.எஸ் வாய் திறந்ததேயில்லை.மாறாக இந்துகோவில்களை இடிக்கும் சிங்களவர்களோடு உறாவாடி மகிழ்கிறது பிஜேபி ஆர்.எஸ்.எஸ். (பார்க்க படம் 01). இது எதோ போர்காலங்களில் மட்டுமில்லை இன்றும் இதேநிலைதான்.

நான்கு நாட்களுக்கு முன்னால் 24.07.2020 மட்டகளப்பு மாவட்டத்தில் மலையின் மேல் இருந்த ஒரு முருகன் கோவிலை சிங்கள பவுத்த பேரினவாதிகள் இடித்து தள்ளியுள்ளனர். அந்த கோவிலுக்குள் இருந்த மூல முருகன் சிலையை இரண்டு துண்டுகளாக உடைத்திருக்கிறார்கள். இத்துனைக்கும் இந்த கோவிலை 20நாட்களுக்கு முன்னால் தான் சிங்கள பவுத்த பேரினவாத அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த முருகன் சிலை உடைப்பு நடைபெற்றிருக்கிறது. இது போலவே முல்லைதீவிலும் தமிழர்களின் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க படம் 2,3 & 4)

நாமெல்லாம் இந்து, முருகன் நம் கடவுள் வெற்றிவேல் வீரவேல்ன்னு பக்கம் பக்கமாய் வசனம் பேசும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இது குறித்து இதுவரை திருவாய் மலரவேயில்லையே ஏன்? தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? இல்லை ஈழத்தில் இருக்கும் முருகன் வேறு தமிழகத்தில் இருக்கும் முருகன் வேறா? இல்லை முருகனே இந்து கடவுள் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடம்.

அன்பான தமிழர்களே பிஜேபி ஆர்.எஸ்.எஸின் இந்த இரட்டை நிலையை புரிந்துகொள்ளுங்கள். ஆன்மீகம் அவரவர் விருப்பம்.ஆனால் அரசியல் என்பது நாம் ஒவ்வொருவரின் வாழ்வை வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கக்கூடியது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.நேரத்துக்கு நேரம் மாறும் பச்சோந்திகளின் பேச்சைக்கேட்டு நமது அரசியல் உரிமையை நமது வரலாற்று எதிரிகளிடம் அடகு வைத்துவிடாதீர்கள். ஒநாய்களின் கவலைகள் ஆடு நனைகிறதே என்று தான் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply