நாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்

ஊரடங்கின் போது வெளிமாநி தொழிலாளர்கள் மொத்தமாக சொந்த ஊர் திரும்பியதில் இரயில்வேக்கு 428 கோடி லாபம்
நாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்:

கொரோனா பேரிடரின் போது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மோடி அரசு தொடர்ந்து அறிவித்த ஊரடங்கால் சொந்த ஊரை விட்டு வேறுமாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அடுத்து என்ன நடக்குமென்று தெரியாமல் திக்குமுக்காடி போனார்கள். வேறு வழியில்லை என்ற நிலையில் தங்களது சொந்த ஊரை நோக்கி பொடிநடையாக பச்சிளம் குழந்தைகளோடு நடக்கத்தொடங்கிவிட்டார்கள். இதுவரைக்கும் மோடி அரசு அவர்கள் குறித்து சிறு அக்கறையும் கொள்ளவில்லை.
இந்நிலையில் நடந்துசெல்லும்போதே பலர் இறக்கிறார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் பேசுபொருளாகி மோடி அரசின் தொழிலாளர் விரோத,மக்கள் விரோத செயல்பாடு அம்பலமானது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் மே 1 அன்று எங்கள் அரசு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப இரயில் சேவையை இயக்குமென்று அறிவித்தது.

அப்படி போகும் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரயிலுக்கு ஆகக்கூடிய கட்டணத்தில் மேலும் ரூபாய் 50கூடுதலாக அந்தந்த தொழிலாளர்களே ஏற்கவேண்டுமென்று முதலில் மோடி அரசு சொன்னது. இது கடுமையான பிரச்சனையை கிளப்பியது. இதனடையில் மே4ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் சொந்த ஊர் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு இரயிலுக்கு ஆகும் செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியே ஏற்குமென்று அறிவித்தது. இதன்பின் வேறு வழியில்லாமல் மத்திய பிஜேபி அரசு மத்திய அரசு 85%, மாநில அரசு 15% ஏற்குமென்று அறிவித்தது. இதனையே வெளிமாநில தொழிலாளார்கள் குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் இது முற்றிலும் பொய்யென்றும் நாட்டு மக்களையும் நீதிமன்றத்தையும் மோடி அரசு ஏமாற்றியிருக்கிறது என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. மும்பையை சேர்ந்த அஜய் போஸ் என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக இரயில்வே அமைச்சகத்திடம் ”ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இயக்கப்பட்ட சராமிக் இரயில்கள் மூலம் இரயில்வேக்கு கிடைத்த கூடுதல் வருமானம் எவ்வளவு” என்ற கேள்விக்கு பதிலளித்த இரயில்வே அமைச்சகம் 428கோடி கூடுதலாக இரயில்வேக்கு வருமானம் வந்திருக்கிறது என்று பதில் அளித்திருக்கிறது.

https://mumbaimirror.indiatimes.com/coronavirus/news/shramik-special-trains-rlys-earned-rs-428-cr-ferrying-migrants-home/articleshow/77176697.cms

ஆக இதன்மூலம் தொழிலாளர்களிடம் மோடி அரசு பணம் கூடுதலாக வாங்கியிருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் எஜமானர்களான மக்களையும் ஏமாற்றி அதை நடைமுறைபடுத்தும் நீதிமன்ற அமைப்பையும் ஏமாற்றியிருக்கிற மோடி அரசு நியாயப்படி பதவியில் இருக்கக்கூடாது. ஆனால் இந்த செய்தி வெளியேவராமல் திட்டமிட்டு மறைத்துவருகிறது மோடி அரசு. ஆகவே நாம் இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply