தமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்

தமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்

இந்தியா:

ஆரம்ப காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிய இந்தியா, உயர்சாதிகளின் திட்டத்திற்கு அவர்கள் இணங்க மாட்டார்கள் என்று தெரிந்ததும் அதன் நிலைப்பாட்டை மாற்றியது. (IPKF அனுப்பியத்திலிருந்து நிறைய சொல்லலாம்)

இலங்கை எவ்வளவு தூரம் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்ததோ, அதே அளவு இந்தியாவும் விடுதலை புலிகளுக்கு இருந்தது, இருந்து வருகிறது.

ஒரு வேலை (சர்வதேச அளவில் ஆளுமை உள்ள) இந்தியா புலிகளை ஆதரித்திருந்தால், தனி தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும்.

இலங்கைக்கு பொருளாதார உதவி செய்து புலிகளை ஒடுக்கிய பாஜக வாஜ்பாயி அரசும் சரி, இந்தியாவின் நலன்களுக்காக விடுதலை புலிகளை அழிப்பதும், பிரபாகரனை கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை எடுத்த சோனியா காந்தி மன்மோகன் காங்கிரஸ் அரசாங்கமும் சரி (காலங்காலமாக அகண்ட பாரத திட்டத்தில் உள்ள பார்ப்பனியத்தின் கொள்கையில்) என்றுமே தமிழர்களுக்கு எதிராக மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது.

ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படும்போது, இந்தியா மட்டும் தப்பித்து விட முடியாது.

சீனா :

7 பில்லியன் டாலர் நிதி உதவியை சீனா இலங்கை ராணுவத்திற்கு வழங்கியது. 2008க்கு பிறகு இலங்கை கப்பல் படையில் நாளில் ஒரு பங்கு சீனா அளித்த படகுகள் இருந்தன.

பாக்கிஸ்தான்:

பாக்கிஸ்தான் ISIயிடம் பயிற்சி பெற்ற இஸ்லாமிய பாதுகாப்பு படையினர் புலிகள் பற்றிய உளவுத்தகவல்களை இலங்கைக்கு கொடுத்தது. இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிளவுகள் ஏற்படுத்தி முக்கிய பங்காற்றியது. விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டது.

அமெரிக்கா:

அமைதி ஒப்பந்தத்தை முறிப்பதிலும், இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பதிலும் அமெரிக்கா அரசு முதன்மை பங்காற்றியது.

2006 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்க ஊக்குவித்த அமெரிக்க அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிகள் புரிந்தது. அதுமட்டுமல்ல ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னரும் இலங்கைக்கு நெருக்கடி வந்துவிடாதபடி ஐநா மன்றத்தில் சட்ட வரைவு கொண்டுவந்து தமிழீழ கோரிக்கையை நீர்த்துப்போக திட்டம் வகுத்ததில் அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியம்.

சிங்கள அறிவுஜீவி ஜுட் லால் ஃ பெர்னாண்டோ அமெரிக்க-பிரித்தானிய கூட்டணி நாடுகளே 2009 தமிழீழ இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

பிரித்தானிய அரசாங்கம்:

1980களில் இருந்தே இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானிய அரசு ராணுவ பயிற்சிகளை அளித்து வந்துள்ளது.

குறிப்பாக புலிகளை கொல்லும் பயிற்சியினை இலங்கை ராணுவத்திற்கு அளித்தது.

எந்த ஒரு நியாயமான காரணங்களும் இல்லாமல் 2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது பிரித்தானிய அரசு (அது இலங்கை அரசே புலிகளை தீவிரவாத இயக்கமாக அறிவிக்காத காலகட்டம், 9/11 அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பிற்கு முன்னாள்)

பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் அழுத்தத்தின் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகள் மீது தடை விதித்தது.

இந்த நாடுகளுடன் சேர்ந்து ஈரான், ரஷ்யா, ஐக்கிய நாடுகள் (ஐ.நாவின் தோல்விகளை பட்டியலிடும் பெட்ரி ஆய்வறிக்கை), ஐரோப்பிய ஒன்றியம், லிபியா, தென் கொரியா, செக் குடியரசு, உக்ரைன், பிரான்ஸ், ஜப்பான், மாலத்தீவு, ஸ்லோவாக்கியா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கியூபா, இந்தோனேஷியா, கிரேக்கம், கனடா முதலான 39க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன், லட்சக்கணக்கான டாலர்களை செலவழித்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் இனப்படுகொலைக்கு உள்ளாகிய பிறகே ஒரு தமிழனை தோற்கடிக்க முடிந்தது இலங்கை அரசால்.

இப்படி தமிழர் கடலில் தமிழர்களுடைய நிலப்பரப்பில் அனைத்து சர்வதேச அரசுகளும், அதனுடைய முதலாளிகளின் வணிக லாபத்திற்காக தமிழீழ மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியது.

மேலும் இது போல புவிசார் அரசியல் கட்டுரைகளை படிக்க மே 17 இயக்க குரலை படியும்.

கட்டுரைகளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடரவும்.
https://may17iyakkam.com/may17-kural-may-2020/

Leave a Reply