பாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்

பாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் – மே 17 இயக்கம்

இதுவரை இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அத்தனை பேரையும் மர்ம நபர்களே கொலை செய்தனர்.

தலித் மக்களின் குடிசைகள் தொடங்கி இன்று அண்ணலின் நினைவு இல்லம் தாக்கப்பட்டது வரையிலும் மர்ம நபர்களே இதன் பின்னால் உள்ளனர்.

இந்த மர்ம நபர்கள் யாராக இருப்பார்கள் என சிறு ஆய்வு செய்தால் சாதி, மத வன்மம் மிக்க காவி பயங்கரவாதிகளாகவே இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் அண்ணலின் எண்ணற்ற சிலைகள் இந்த பயங்கரவாத கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளான போதும், கம்பீரமாகவே இன்றும் என்றும் அண்ணலின் சிந்தனையும், பார்ப்பனிய எதிர்ப்பும் இருக்கும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்வோம்.

மத்திய அரசே!! மகாராஷ்டிரா மாநில அரசே !! அண்ணலின் நினைவு இல்லத்தை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply