மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்

மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்

மோடி அரசு இந்தியாவில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்துவரும் வெறுப்பு பிரசாரமும் அவர்களை குறிவைத்து நடக்கும் கலவரங்களும் இஸ்லாமிய நாடுகளை மிகுந்த ஆத்திரம் கொள்ளசெய்தது.. அதன் வெளிபாடே மலேசிய பிரதமர் இந்திய அரசு இஸ்லாமியர்களுக்கெதிராக செய்வதை போல இங்கிருக்கும் இந்தியர்களுக்கு எதிராக ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் செய்தால் என்னவாகுமென்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு பின்பு பத்திரிக்கையாளரிடம் கேட்டார். ஆனாலும் இதை கண்டுகொள்ளாத பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தொடர்ச்சியாக இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தையும் கலவரங்களையும் செய்தது.

இதன்விளைவாக இப்போது ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி விட்டது.முதலாவதாக குவைத் அரசு நேற்று தனது பாராளுமன்றத்திலும் தனது சட்ட அவையிலும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதாவது இனி குவைத்தில் குவைத் மக்கள் தொகையில் 15% மட்டுமே வெளிநாட்டினர் வேலையில் அமர்த்தப்படுவர் என்பது தான் இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம். https://www.indiatoday.in/…/corona-fallout-up-to-8-lakh-ind….

https://www.thehindu.com/news/national/eight-lakh-indians-may-be-forced-to-leave-kuwait-as-the-country-approves-expat-quota-bill/article32000615.ece?fbclid=IwAR2bsktY5GGKZ3XNXG84OAMVOYND-WYYmUdjYiLXVpeTPqvwCSgBzT_jl8g

அதன்படி குவைத் மக்கள் தொகையான 48லட்சம் பேரில் 14லட்ம் பேர் இந்தியர்கள். ஆக சுமார் 8லட்சம் பேர் கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவாகியிருக்கிறது.சர்வதேச ரீதியில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக கொரோனாவால் தான் இந்த சட்டம் கொண்டுவந்திருக்கிறோமென்று சொல்லி வருகிறது. ஆனால் மோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமே இந்தியர்களை வெளியேற்றச்செய்யும் குவைத் அரசின் செயலுக்கு முக்கிய காரணம்.

நமக்கு நன்றாக தெரியும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் அதிகம் இருப்பது தமிழர்களும் மலையாளிகளும் தான். அப்படியிருக்க 8 லட்சம் இந்தியர்கள் பாதிப்படைவார்களென்றால் அதில் அதிகம் பாதிப்படையபோவது தென்னிந்தியாவை சேர்ந்த மலையாளிகளும், தமிழர்களுமே. ஆகவே தான் என்னமோ இது குறித்து இன்னமும் மோடி அரசு பேசவேயில்லை.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply