வெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு!

வெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு!

அரசு செலவில் அவர்களை தாயகம் மீட்டு வா!

இந்தியாவில் சரியான வேலைகள் அரசுகள் உருவாக்காத காரணத்தால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் வேலைதேடி மிகக்குறைந்த ஊதியத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இப்படி செல்லும் இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் சரிவர நிறைவேற்றப்படாமல் அவர்கள் தங்க இடமில்லாமலும், சுகாதாரமான உணவு இல்லாமல் மிக கடினமான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதுவும் இந்த கொரோனா காலத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. இவர்கள் வேலைக்கு சென்ற கம்பெனிகள் பேரிடரை முன்னிட்டு காலவரையின்றி மூடிவிட்டதால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிலர் இறந்துபோகும் அவலநிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையில் அங்கிருக்கிற அரசுகளும் முழுமையாக இவர்களை கைவிட்ட நிலையில் தனது சொந்த தேசமாவது காப்பாற்றுமென்று கடந்த ஆறு மாதங்களாக கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து பார்த்திருக்கீறார்கள். சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநில மக்களை அழைத்து வருவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்ட மறுக்கிறது. அதிலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மிக மோசமானவை.

தமிழகத்தில் விமானசேவையை இயக்க தொடர்ந்து தமிழக அரசு மறுத்துவருகிறது. பல்வேறு அழுத்தத்தின் காரணமாக சில விமானங்களை மட்டும் இயங்க ஒப்புக்கொண்டு அப்படி விமானங்களில் வருபவர்களிடம் மூன்று மடங்கு நான்கு மடங்கு பணத்தை பிடுங்குவதும் அவர்கள் சென்னைக்குள் நுழைந்தால் பாதுகாப்பு என்ற பெயரில் கூடுதல் பணத்தை வாங்குவதமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
ஆகவே அண்டை மாநிலமான கேரளாவில் இருப்பது போல வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனி நல அமைச்சகமும், தனி நலவாரியமும் அமைத்திட வேண்டுமென்றும், தற்போதைய கொரோனா காலத்தால் வெளிநாடுகளில் வேலையிழைந்து வருமானமின்றி செய்வதறியாது திகைத்து நிற்கும் தமிழர்களை தமிழக அரசே சொந்த செலவில் தமிழகம் அழைத்து வரவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அதன் தலைவர் தோழர். திரு வேல்முருகன் ஒருங்கிணைக்கும் இணையவழி போராட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த போராட்டத்தில் மே17 இயக்கம் கலந்துகொள்கிறது.
ஆகவே நாளை 05.07.20அன்று காலை 10 மணியளவில் மேற்கண்ட இரண்டு அவரவர் வீட்டிலிருந்தே பதாகை ஏந்தும் போராட்டமும், டிவிட்டரில்

#BringBackTamils

#SetUpMinistryofPersonalWelfare

#SetupSeparateWelfareBoard

எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி இணையப்பரப்புரையும் நடைபெறுகிறது. ஆகவே நமது உறவுகளை பாதுகாப்பாக தாயகத்திற்கு மீட்டுவர அனைவரும் இந்த போராட்டத்தில் இணைந்து ஆதரவு தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply