சமூக வலைத்தளங்களில் பரப்புரை – #StandWithArputhammal

வரும் ஜூன் 11ம் தேதியுடன், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் அவர்களை, விசாரணை என்று அழைத்து சென்று குற்றவாளியாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை முன்னிட்டு, இந்த 30 ஆண்டுகளாக அவரது விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் அவர்களுக்கு துணை நிற்கவும், பேரறிவாளன் அவர்களை விடுவிக்க கோரியும் ஜூன் 11 அன்று சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. ஆகையால் தோழர்கள் அனைவரும் ஜூன் 11 வியாழன் அன்று 8 காலை முதல் #StandWithArputhammal என்னும் ஹேஷ்டேக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply