மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி

மின்சாரம் முழுவதையும் தனியார்மயமாக்கப்படுவதற்கான முன்னோட்ட கூட்டத்தை நடத்தி முடித்த மோடி

இந்தியாவில் தொழில்த்துறை உட்பட பல துறைகள் வளர்ச்சி அடைந்ததென்றால் அதில் மின்சாரத்தின் பங்கு முதன்மையானது. அப்படிப்பட்ட மின்சாரத்தை தொடர்ந்து இந்தியாவை ஆண்ட மற்றும் தற்போது ஆளும் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு கொடுக்கும் வேலையை செய்து வந்தார்கள். தற்போது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலிருக்கும் பாசிச பாஜகாவின் மோடி அரசு மின்சாரம் முழ்வதையும் தனியாருக்கு கொடுக்கும் வேலையில் இறக்கியிருக்கிறது. இதற்காகவே மின்சார திருத்தச்சட்டம் 2020என்ற மசோதா ஒன்றை தயாரித்து மாநிலங்களெல்லாம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இருக்கும்போது அனுப்பியிருக்கிறது.

இந்த சட்ட மசோதாவின் தீமையை முதன்முதலில் மே17 இயக்கம் தான் மக்களுக்கு அறிவித்தது. இதன் பின் விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு தற்போது நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. ஆனால் இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ எப்படியாவது நிறைவேற்றியே தீருவது என்கிற ரீதியில் நேற்று 27.05.20 புதன் அன்று மின்சார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியிருக்கிறார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி

1.மின்சார விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதால் நன்மை என்று மாநில அரசு மக்களுக்கு விளக்கவேண்டும்.

2.மின்சார் விநியோகத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களது வேலைத்திறனை மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு தெரிகிற மாதிரி விளம்பரப்படுத்தவேண்டும். போன்ற பொன்னான அறிவுரைகளை அள்ளிவீசியிருக்கிறார்.

ஆக கிட்டதட்ட மின்சாரம் முழ்வதும் (உற்பத்தி, விநியோகம்) தனியாருக்கு கொடுக்க மோடி கும்பல் முடிவெடுத்துவிட்டது என்பதை தான் அவரின் இந்த கூட்டத்தின் பேச்சு உணர்த்துகிறது.
https://www.business-standard.com/article/economy-policy/pm-modi-reviews-power-sector-says-state-specific-solutions-needed-120052800333_1.html

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply