தமிழீழமெனும் விடுதலைக் கோரிக்கையை தமிழ்நாடு தன் உயிரில் ஏந்தி இருக்கிறது

நினைவேந்தல் பதாகைகள், விளக்கு ஏந்தி பலநூறு புகைப்படங்கள், ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தினர்.

அரசின் அடக்குமுறைகள், அவதூறுகள் என்பவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு தமிழீழம் எனும் பெருங்கனவிற்காக ஒன்று கூடினார்கள்.

தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலேல்லாம் மக்கள் திரண்டெழுந்த நிகழ்வு பலவேறு செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது

தமிழீழம் என்பது தமிழர்களின் குருதியோடு கலந்த நியாய உணர்வு. அதை எவராலும் அழித்துவிட முடியாது. இவ்விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த இயலாது. போராளிகளை புறக்கணித்துவிட முடியாது. இந்த உணர்வு எமக்கானது என விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டுவிடவும் முடியாது.

தமிழீழமெனும் விடுதலைக் கோரிக்கையை தமிழ்நாடு தன் உயிரில் ஏந்தி இருக்கிறது.

எழட்டும் தமிழீழம்

-தோழர் திருமுருகன் காந்தி

Leave a Reply