விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள்

விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்து அவதூறுகளைக் கட்டமைத்தது பார்ப்பனீய பத்திரிக்கைகள்.


‘தி இந்து’ பத்திரிக்கை இதில் முதலிடம் வகித்தது. புலிகள் மீதான பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினார்கள் என்.ராமும், சோ.ராமசாமியும். ஒருவர் மார்க்சியவாதி எனத்தன்னை சொல்லிக்கொள்வார், மற்றவர் அப்பட்டமான இந்துத்துவவாதி, நடுநிலை என்று சொல்லிக்கொண்ட மாலன் முதல் காலச்சுவடு கும்பல்வரை அனைவரும் ஒரே திசையில் பயணித்தார்கள். இவர்களது இலக்கு, ‘தமிழீழத்தை சிதைக்கவேண்டும், புலிகளை அழிக்கவேண்டும்’ என்பது.

ஆர்.எஸ்.எஸ்ஸினைச் சார்ந்த காலச்சுவடு கும்பலுக்கு, மார்க்சியவாதி ‘தி இந்துவில்’ எப்போதும் இடமுண்டு. இருவரும் சேர்ந்து இனப்படுகொலையில் பங்காற்றிய சிவசங்கர்மேனனை அழைத்து கூட்டம் நடத்துவார்கள், புத்தகம் வெளியிடுவார்கள். மறுபுறம் அருந்ததிராயை வைத்து தலித்திய விடுதலை பேசுவார்கள்.

டெட்டான் ஹெரால்டு பத்திரிக்கையில் முராரி புலிகளுக்கு எதிரான தலையங்கத்தை தீட்டிக்கொண்டே இருப்பார். என்.டி.டி.வியில் பயங்கரவாதத்தின் மீது போரில் இலங்கை வெற்றி பெறுகிறது என்று அதன் பத்திரிக்கையாளர் இலங்கை ராணுவத்தோடு போர் முனைக்கு செல்வார். துக்ளக் போர் வெற்றியை கொண்டாடியது. ‘தி இந்து‘ மகிந்த ராஜபக்சேவின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டு மகிழ்ந்தது. பாலச்சந்திரன் படுகொலை காணொளி ஆவணத்தை ஒரு ப்லிம் என்று பேசியது. இந்த பத்திரிக்கைகளில் உயர்சாதி கூட்டங்கள் தொடர்ந்து புலிகளுக்கு எதிராக கட்டுரை எழுதினார்கள். இதன் பட்டியல் மிகப்பெரியது.

இன்று ஊடக விவாதத்தில் மோடிக்கு எதிராக தோளை உயர்த்துவதைப் போல காட்டிக்கொள்ளும் ஆர்.கே.ராதாகிருஸ்ணன் தான் ப்ரண்ட்லைன் பத்திரிக்கையின் இலங்கை நிருபர். இவர் தொடர்ந்து புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கட்டுரைகளை பொய்யாக எழுதித்தள்ளியவர். மகிந்த ராஜபக்சேவின் மனம் கவர்ந்தவர். இவரது படைப்பினை பாராட்டி இலங்கை அரசு ‘தி இந்து’ இதழை பாராட்டி சிறப்பித்தது.

தமிழினப்படுகொலை நடந்து கொண்டிருந்த பொழுது லயோலா கல்லூரியில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து பேச வர இருந்த அருந்ததிராயை ‘தி இந்து’வின் என்,.ராம் தடுத்து நிறுத்தினார்.

’வையர்’ இதழினை நடத்திவரும் முற்போக்காளர் சித்தார்த்வரதராசன் ஆசிரியராக ’தி இந்து’வில் இருந்த போதும் இதே நிலை. இதுமட்டுமல்லாமல் ஆந்திர பார்ப்பனர்கள், கேரள பார்ப்பனர்கள் என ஒரு பட்டாளமே தமிழினப்படுகொலையை நியாயப்படுத்தி தொடர்கட்டுரைகள் எழுதித்தள்ளினார்கள். இந்தியா முழுவதுமிருந்த முற்போக்கு இதழ்களில் இப்படுகொலை குறித்து எந்தத் தகவலும் வராமல் இக்கும்பல் பார்த்துக்கொண்டது. எம்.எஸ்.சாமிநாதன், சத்தியமூர்த்தி, பகவான் சிங், டி.ராமகிருஸ்ணன், கர்னல் ஹரிஹரன், சூரிய நாராயணன், ராமன், வெங்கட்ராமன், ஞாநி, மாலன் என இப்பட்டியல் மிகப்பெரியது. இதில் தினமலரை எப்படி தவிர்த்துவிட முடியும்.

இந்த ’மீடியா மாபியா’ கும்பலே இன்றும் தமிழர்கள் போராட்டங்கள் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் முக்கியத்துவம் பெறாமல் தடுக்கிறவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழர்களின் அரசியலை முற்றிலும் அவதூறுகளுக்குள்ளாக்குபவர்களும் இக்கூட்டமே.

இதனால் தான் இக்கூட்டத்தை அம்பலப்படுத்தாமல் நமக்கான நீதிப்பயணத்தை வெற்றியை நோக்கி நகர்த்த இயலாது என மே 17 இயக்கத்தின் இரண்டாம் நிகழ்வை 2009, நவம்பர் 1 அன்று ‘ தி இந்து’ இதழுக்கு எதிராக துவக்கினோம்.

மேலே நான் குறிப்பிட்டது ஒட்டுமொத்த கட்டமைப்பில் ஒரு சிறு பகுதியே. இந்தக் கட்டமைப்பு வலிமையானது, வரலாற்று அனுபவம் கொண்டது, வன்மமானது, படுகொலை செய்யத் தயங்காதது, குற்ற உணர்ச்சியற்றது, கொடூரமானது. மென்மையாக பேசும் இக்கூட்டத்தின் இரத்தவெறியை தமிழீழத்தில் கண்டோம். ஆனால் இவர்களை நோக்கி எழுப்பவேண்டியக் கேள்விகளை திசை திருப்பியதில் பலருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால் மே17 இதை ஒரு போதும் மறக்காது. இக்கூட்டமைப்பில் பலர் இன்று முற்போக்காளனாக, மோடி எதிர்ப்பாளனாக காட்டிக்கொண்டாலும், அவர்களது நோக்கம் என்பது வேறு. அது தமிழின வெறுப்பு எனும் அரசியலே.

-தோழர் திருமுருகன் காந்தி

Leave a Reply