தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம்

தொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம்.

கொரோனா ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு முதலாளிகள் கண்டிப்பாக ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கடந்த மார்ச் 29’2020இல் மோடி அரசு அறிவித்த அறிவிப்பை நேற்று உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுக்கொண்டுவிட்டது. இதன் மூலம் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகிறது.

ஊரடங்கு அறிவித்தபோது நடக்கத்தொடங்கிய வெளிமாநிலத்தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக சொந்த ஊர் போய்ச்சேரமால் இந்தியாவின் சாலைகளில் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கு எந்தவித அடிப்படை தேவையையும் இன்றுவரை செய்யாமல் அவர்களின் உரிமைக்காக பேசுபவர்களையும் அவர்களோடு நீங்களும் ’சூட்கேசை’ தூக்கிக்கொண்டு செல்லுங்கள் என்று திமிராக பேசும் பாஜக அரசு. தற்போது அவர்களுக்கான ஊதியத்தையும் தரத்தேவையில்லை என்று சொல்லியிருப்பது முற்றிலும் தொழிலாளார் விரோத பாசிச நடவடிக்கையே..

https://www.business-standard.com/…/govt-withdraws-order-on…

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply