உத்திரபிரதேசத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் 21 பேர் இறப்பு

- in கொரோனா

இன்று (16.05.20) காலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வண்டியில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வண்டி உத்திரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே 21தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். மேலும் 15-20பேர் கவலைக்கிடமாக அவுரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். https://www.hindustantimes.com/…/story-1T3YPJwRUeSNDqEyZLo3…

கடந்த 10நாட்களில் இன்றோடு சேர்த்து 51தொழிலாளர்கள் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான உணவும் தங்குமிடமும் செய்து தராததினாலும், அரசின் நிவாரணம் ஏதும் இல்லாமலும் அவர்கள் வேறு வழியின்றி சொந்த ஊருக்கு செல்கின்றனர். குறைந்தபட்சம் அவர்களுக்கான வாகனவசதியாவது செய்து கொடுத்திருக்கலாம். இப்படி அவர்களுக்கு எதுவும் செய்யாத மோடி அரசு தான் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும்.

Leave a Reply