ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

- in வாழ்வாதாரம்

ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் இணையவழி போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது.

கொரோனாவை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தவறிய தமிழ்நாட்டு அரசை கண்டிக்கும் விதமாக தமிழ்ப்புலிகள் கட்சி இணையவழி போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (13-05-20) புதன்கிழமை காலை 11 மணியளவில் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்து முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்று தமிழ் நாடு அரசிற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்.

கோரிக்கைகள்:

தமிழக அரசே!

* தலித்துகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்து!

* தலித்துகளுக்கு எதிரான சாதி வெறியாட்டங்கள், படுகொலைகளை தடுத்து நிறுத்து!

*விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ படுகொலைக்கு நீதி வழங்கு! இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கு!

*தூத்துக்குடி தங்கராசு-பலவேசம், சேலம் விஷ்ணுப்பிரியன், கன்னியாகுமரி வினோத் படுகொலைக்கு நீதி வழங்கு!

* சேலம் டி.காணகாபாடி தலித் பஞ்சாயத்து தலைவர் அம்சவள்ளிக்கு உரிய பாதுகாப்பு உடனே வழங்கு!

சிறுமி ஜெயஸ்ரீ அதிமுக பொறுப்பாளர்களால் படுகொலை மற்றும் தமிழகத்தில் குழந்தைகள் , பெண்கள், தலித்துகள் மீதான வன்முறையைக் கண்டித்து தமிழ்ப்புலிகள் நடத்தும் இணைய எதிர்ப்பு போராட்டத்திற்கான ஆதரவு உரை

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply