புதிய மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக குரல் கொடுத்த மே17 இயக்கம் -தோழர் திருமுருகன் காந்தி

புதிய மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மே17 இயக்கம் முதன்முதலாக குரல் கொடுத்தது. இச்சட்டம் மாநில உரிமைகளுக்கு, விவசாயிகள், வீடுகள், விசைத்தறிகளுக்கு எதிரானது என்று அம்பலப்படுத்தினர் எம் இயக்கத் தோழர்கள். மக்கள் உரிமைக்கான களத்தில் முதன்மையில் நிற்கும் இயக்கம் மே17.

பாராளுமன்ற உறுப்பினர் பேசி இருக்கவேண்டிய இச்சட்டவிவரங்களையும், இழக்கப் போகும் உரிமையையும் முதன்முதலில் அடையாளம் காட்டி குரலை உயர்த்தியது மே17 இயக்கம். அவர்கள் செய்யத் தவறிய பணியை மக்களுக்காக, மக்கள் மன்றத்தில் மே17 இயக்கம் செய்து கொண்டே இருக்கும்.

கொள்கை சார்ந்த அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு விரோதமாக இருப்பின் துணிந்து எதிர்த்து நிற்பது மே17 இயக்கத் தோழர்களே.

அரசின் கதவுகளைத் தட்டுவது, அதன் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்தும் ஓசையை ஊர் மக்களை கேட்கச் செய்வதற்கே!

உணவு, உடை கொடுப்பது மட்டுமல்ல, உரிமையை மீட்டெடுப்பதே இயக்கத்தின் அடிப்படைப் பணி.

வீரவசனங்கள் பேசி, வெட்டிக்கதைகள் அளந்து மக்களை மாயைக்குள் வைத்திருக்கும் பணிகளை ஒருகாலமும் செய்யாது மே17 இயக்கம்.

எங்கள் செயல்பாடே எங்களது வாக்குறுதி.

தந்தைப் பெரியார் வழியில் தமிழ்த்தேசிய உரிமைகளை வென்றெடுக்க ஒன்றாவோம்.

இந்துத்துவ அரசியலை வீழ்த்த துணிந்து முன்னேறுவோம்.

நாம் வெல்வோம்.

-தோழர் திருமுருகன் காந்தி

Leave a Reply