கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு மே 17 தோழர்கள் நிவாரணப்பணி

- in கொரோனா

நேற்று 24-4-2020 காலை கேகேநகர் ராணி அண்ணா நகரிலிருக்கும் தோழர் ஒருவர் இயக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது குடும்ப சூழலை தோழர்களிடம் தெரிவித்தார். 6பேர் கொண்ட அவர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை மே17 இயக்க தோழர்கள் நேற்று மதியம் வழங்கினார்கள்.

மேலும் 6பேர் கொண்ட குடும்பம் என்பதால் அரசு ரேசனில் வழங்கிய 20கிலோ அரிசி போதுமானதாய் இருக்காது என்பதால் 10கிலோ அரிசியையும் சேர்த்து வழங்கினார்கள்.

Leave a Reply