கோவையில் கொரனாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

கோவையில் கொரனாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

கோவையில் கொரானாவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு தீடிரென்று காய்ச்சல் அதிகரித்திருக்கிறது சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கோவிட்-19 பாசிடிவ் என்று வந்திருக்கிறது. உடனடியாக இ.எஸ்.ஜ மருத்துவமனையில் அவரை தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர் தனது உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருக்கிறார்.

“சார் எனக்கு கொரனோ பாசிடிவ் என்று வந்திருக்கிறது. இங்கே மருத்துவர்களே இல்லை. மேலும் எனக்கு காாய்ச்சல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை எனக்கு ஹைட்ரோக்சிகுளோரைடு கொடுக்கவேயில்லை எனக்கு உதவுங்கள் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்”.

அந்த செய்தியை சம்பந்தப்பட்ட உயரதிகாரி மருத்துவர் அந்த குருப்பிலிருந்தே நீக்கியிருக்கிறார் என்று டைம்ஸ் நவ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது. பாருங்கள்

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்குங்கள் என்று மீண்டும் மீண்டும் இதற்குதான் மே17 இயக்கம் சொன்னது. அப்போது இந்த சமயத்திலும் அரசியல் பேசனுமா என்று கேட்டவர்கள் இப்படி தொடர்ச்சியாக மருத்துவர்களுக்கு இந்த கொரனோ பரவுகிறதே இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

கொரனோ என்பது மோடி சொன்னது போல் போர் தான். ஆனால் அந்த போரில் முன்னணி போர் வீரர்களான மருத்துவர்கள் இல்லாமல் போவது சரியானதா?

Leave a Reply