மோடி அரசே! தமிழனின் வரிப்பணம் இனிக்குது, தமிழர்களுக்கு உதவி செய்ய கசக்குதா!

மோடி அரசே! தமிழனின் வரிப்பணம் இனிக்குது, தமிழர்களுக்கு உதவி செய்ய கசக்குதா!

இந்தியாவிலேயே வரி அதிகம் கொடுக்கும் மாநிலங்களில் நான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு எந்த ஒரு பேரிடர் வந்தாலும் தமிழகத்திற்கு உரிய நிவாரணம் கொடுக்க மத்திய அரசு ஒருநாளும் தயாராக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. அதே நிலைதான் தற்போது இந்த கொரணோ பேரிடரின் போதும் நிகழ்ந்திருக்கிறது.

என்னதான் தமிழகத்தில் இருக்கும் சிலர் தேசபக்தி என்று மோடி அரசை ஆதரித்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எப்போதும் இடர்களையும் துன்பத்தையும் தான் பரிசாக தருகிறார்கள். தேசபக்தி என்பது என்ன ஒரு வழிப்பாதையா?

உண்மையை உணர்ந்து கொள் தமிழா!
சுயமரியாதையோடு உரிமையை உரக்கக் கேள்!

Leave a Reply