எமது தோழமைகளை உடனே விடுதலை செய் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்

எமது தோழமைகளை உடனே விடுதலை செய். –  தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இளம் தோழரும்,,,ஆடிட்டர் குருமூரத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தார்கள் என்ற பொய் வழக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் உள்ள தோழர்களில் ஒருவருமான *தோழர் சக்தி அவர்களின் பெரியப்பா அய்யா நடராசன் அவர்கள் இயற்கை எய்தினார்*

தோழர் சக்தி அவர்களை இளம் வயதில் இருந்து வளர்த்தவர் இவரே !!

தோழர் சக்தி அவர்கள் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் இறுதி சடங்கை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !!

தோழர் சக்தி அவர்கள் சிறையில் இருந்தாலும்,,, தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் அனைவருமே இறப்பு வீட்டில் இருந்து முழு வேலையை செய்யும் பொறுப்பை ஏற்று வேலை செய்து வருகின்றனர் !!

அய்யா நடராசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் !!

– *கு.இராமகிருட்டிணன்*
– *பொதுச்செயலாளர்*
– *தந்தை பெரியார் திராவிடர் கழகம்*

Leave a Reply