மத்திய மாநில அரசுகளே!  லிட்டில் அந்தமான் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டிடு!

மத்திய மாநில அரசுகளே!  லிட்டில் அந்தமான் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டிடு! – மே 17 இயக்கம்

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த 4 தமிழர்கள்
1) பிரபாகரன் (34)
2) செந்தில்குமார் ‌(35)
3) சுரேஷ் (31)
4) விடயங்கர் (54) மற்றும் இந்தியாவின் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஒப்பந்த தொழிலாளர்களாக அந்தமான் தீவுகளில் லிட்டில் அந்தமான் பகுதிக்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள்.

தற்போது கொரனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவாலும் கடல்வழி வான்வழி பயணம் தடை செய்யப்பட்டிருப்பதாலும் அவர்கள் தமிழகம் வர வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.

மேலும் ஊரடங்கின் காரணமாக தற்சமயம் அங்கு வேலைகள் நடைபெறவில்லை ஆகையால் தற்போது அவர்கள் உணவுக்கும் துன்பப்படுவதாக அறிகிறோம்.

ஆகவே லிட்டில் அந்தமான் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட ஏனையவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிட வேண்டுமென்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள:

1) செந்தில்குமார்
தொடர்பு எண் : 9786059495
2) பிரபாகரன்
தொடர்பு எண் : 9786605470

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply