இந்தியாவில் கொரனோ தொற்றுக்கு முதல் முறையாக மருத்துவர் பலி

எது நடக்கக்கூடாதென்று ஆரம்பத்திலிருந்து பலமுறை மே 17 இயக்கம் வலியுறுத்தியதோ அது இன்று நடந்துவிட்டது. இந்தியாவில் கொரனோ தொற்றுக்கு முதல் முறையாக மருத்துவர் பலி.

கொரனோ என்ற மோசமான இந்த வைரஸ் பரவத்தொடங்கிய நாளிலிருந்து மே 17 இயக்கம் பல்வேறு வகையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அரசின் கவனத்திற்கும், பொதுமக்கள் கவனத்திற்கும் கொண்டு வந்தவண்னம் இருக்கிறோம். அப்படி மீண்டும் மீண்டும் பலமுறை வலியுறுத்தியது கொரனோ தொற்றுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு போதுமான பாதுகாப்பு சாதனங்களை வழங்க மறுக்கிறது. இதனால் மருத்துவர்களுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. ஆகவே இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் சில மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த விசயத்தில் உதவி செய்யாத பட்சத்தில் இந்தியாவில் மத்திய பிரதேச மருத்துவர் ஒருவர் முதலாவது பலியாகியிருக்கிறார். இது அரசின் தோல்வியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

நேற்றுக்கூட ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமாத் சோரான் கொடுத்த ஒரு பத்திரிக்கை பேட்டியில் மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வரவேண்டிய நிதியைக்கூட தராமல் இருக்கிறார்கள். இதனால் மருத்துவர்களுக்கு கூட எங்களால் போதிய வசதியை செய்து கொடுக்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்.

ஆகவே இந்த நிலைமை தொடராமல் இருக்க மத்திய அரசு உடனடியாக மாநிலங்களுக்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும்.இல்லையென்றால் ஒரு பக்கம் வைரஸ் கொடுமை பரவும் அபாயமென்றால் இன்னொரு பக்கம் வைத்தியம் பார்க்க ஆளில்லாமல் போகும் அவலநிலை உருவாகிவிடும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply