கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 48 ஆவது நினைவு நாள் இன்று

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 48 ஆவது நினைவு நாள் இன்று – மே 17 இயக்கம்

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு தரப்பினரின் தியாகத்தால் உருவானது. அப்படி இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், இந்தியாவை ஜனநாயக படுத்தும் வேலையான இந்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராகவும் இருந்தவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் தேசிய மொழியாக எது இருக்க வேண்டுமென்கிற விவாதம் நடைபெறுகையில், இந்தியாவில் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றால் அந்த தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என்று உரக்க முழங்கிய கொள்கை வீரர் காயிதே மில்லத் அவர்கள்.

மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்படும் பொழுது தமிழகத்திற்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதி கேரளாவிற்கு கொடுப்பதை மிகக்கடுமையாக எதிர்த்தார். இந்த இரண்டு பகுதியும் தமிழகத்தோடு தான் இருக்க வேண்டும் அதுவே நியாயம் என்று முழங்கியவர் காயிதேமில்லத்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் சமூக நீதிக்காகவும், இஸ்லாமியர்களின் மேம்பாட்டிற்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள்.

இன்று அவரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் கொள்கையை நினைவில் நிறுத்துவோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply