‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்

‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளமாகப் பெருகி வருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனைவிட்டு மறைந்து போய்விடும்.

தமிழர்களுக்கும், மாந்த இனத்திற்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பேரிடரை எதிர்கொள்ளும் விதமாக நீங்கள் மேற்கொள்ள விரும்பும் புதிய யோசனைகள், சிந்தனைகள், வழிகாட்டுதல்கள், தகவல்கள் ஆகியவற்றை மக்களுக்கு பயன்படும் விதமாக அனைவரிடத்திலும் கொண்டு செல்ல மே17 இயக்கம் விரும்புகிறது. இந்த இக்கட்டான காலத்தில் தனியார்மயம் நம் மக்களுக்கான பேருதவியாய் அமையாது என்பது அறிந்த பின்னர், நமக்கான கட்டமைப்பு சிந்தனைகளை வலுப்படுத்துவோம்.
லாபநோக்கமின்றி, மக்கள் நலனை முன்னிறுத்தி முன்மொழியப்படும் அறிவியல், சமூக சிந்தனைகள், யோசனைகள், வழிகாட்டுதல்களை நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள். அவசியமேற்படின் உரிய நபர்களிடத்தில் அவற்றைக் கொண்டு சேர்த்து அனைவரும் பயன்பெற முயல்வோம். இந்த யோசனைகள் மருத்துவத்துறையினரால் ஏற்கப்படுவதாகவும், அறிவியல்பூர்வமானதாகவும் அமைய வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் சிந்தனைகள், வழிகாட்டுதல்களை கிருமி தடுப்பு, நோய் தடுப்பு, மருத்துவ உபகரணங்கள், மருந்து தொடர்பான ஆய்வுகள்-தரவுகள் என்பதிலிருந்து உணவு/ உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்துவது, பசியாற்றுதல், அன்றாட தேவை சார்ந்த (பல்பொடியிலிருந்து, கிருமி நாசினி, சோப்பு என இதர தேவைகள்) தற்சார்பு பொருட்களை உருவாக்குதல் என எந்த வகையிலும் அமையலாம். இதே போன்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறவர்களும் உங்கள் விருப்பங்களை தெரியப்படுத்தலாம்.

தொடர்பு கொள்ளும் முறை: உங்கள் யோசனைகளின் விவரங்களோடு உங்கள் தொடர்பு எண் அனுப்பவும். உங்கள் பரிந்துரைகள், யோசனைகள் குறித்து விவாதிக்க தொடர்பு எண் தேவைப்படுகிறது. உங்கள் அனுமதியின்றி உங்கள் தகவல்கள் பொதுவெளியில் பதிவு செய்யப்படாது.

தொடர்பு மின்னஞ்சல்: tnrespond@gmail.com

தொடர்பு/வாட்ஸ் அப் எண் :8939256289

மே17இயக்கம்
9884072010

Leave a Reply