கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு

கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு

பத்திரிகைச் செய்தி
மார்ச் 28, 2020தமிழகத்தில் இயங்கும் சில இயக்கங்களின், கட்சிகளின் தோழர்கள் (மார்ச் 28, 2020) கூட்டாகக் கலந்தாலோசித்து “கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு“ என்கிற ஓர் அமைப்பைத் துவங்கப்பட்டிருக்கிறது.

முன்னெப்போதும் கண்டிராத ஒரு மாபெரும் நுண்ணுயிர்ப் பேரிடரை இந்த உலகமும், இந்தியத் தேசமும், நமது தமிழ் நாடும் எதிர்கொண்டு நிற்கின்றன. பரந்துபட்ட அளவில் இயங்கி, மக்கள் உயிர்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

சிற்சில குறைகளும், பிரச்சினைகளும் காணப்பட்டாலும், மத்திய, மாநில அரசுகளின் உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் முக்கியமானது.

அதேபோல, மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகளின் பலன்களும், நலத்திட்ட உதவிகளும் அனைத்து தரப்பு மக்களுக்குச் சென்றடைவதையும் உறுதி செய்தாக வேண்டும்.

போதிய கால அவகாசமின்மையோடு அறிவிக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அவசர ஊரடங்கு நடவடிக்கையால், ஏராளமான ஏழை எளிய மக்கள் தத்தம் ஊர்களுக்கு போய்ச் சேர முடியாமல் வழிகளில் தவிப்பதையும், வேலையின்றி, வருமானமின்றி, பசி பட்டினியால் துன்புறுவதையும் பார்க்கிறோம்.

மத்திய, மாநில அரசுகளுக்கும், பல்வேறுப் பிரச்சினைகளோடு கிடந்துழலும் மக்களுக்கும் இடையேயான ஒரு தொடர்புப் பாலமாக இந்த “கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு” இயங்கும்.

பொதுமக்கள் இந்தக் குழுவினரை தொடர்புகொள்வதற்கான வழிவகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

கீழ்க்காணும் தோழர்கள் இந்தக் குழுவில் பங்கேற்று மக்கள் பணியாற்றுவதற்கு இசைவு தெரிவித்திருக்கின்றனர்:

1) பழ. நெடுமாறன்
2)தொல். திருமாவளவன், MP
3) கொளத்தூர் மணி
4) பேராசிரியர் ஜவாஹிருல்லா
5) தி. வேல்முருகன்
6) தெஹ்லான் பாகவி
7) திருமுருகன் காந்தி
8)கே. எம். ஷரீஃப்
9) இனிகோ இருதயராஜ்
10) வன்னி அரசு
11) நெல்லை முபாரக்
12) அப்துல் சமது
13) பெரியார் சரவணன்
14) சுப. உதயகுமாரன்

இந்த முயற்சிக்கு பொதுமக்களும், ஊடகங்களும், அரசுத் தரப்பினரும் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!

கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு
வாட்சப் தொடர்பு எண்கள்:
‭94459 10100‬,
98656 83735.

Leave a Reply