தமிழக அரசே! ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு!

தமிழக அரசே! ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு! – மே பதினேழு இயக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழ்நாட்டு சிறைகளிலுள்ள விசாரணை கைதிகளை தமிழ்நாட்டு அரசு சொந்த பிணையில் விடுவிப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார். அதேவேளை, தமிழ்நாட்டு அரசினால் விடுவிக்கப்பட்ட பின்பும் சிறையில் வாடும் 29 ஆண்டுகால சிறைவாசிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் 10 பேரையும் நீண்டகால பரோலில் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மேலும், அரசியல் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டவர்களையும், 60 வயதிற்கு மேற்பட்ட சிறைவாசிகளையும், 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் நீண்டகால சிறைவாசிகளையும், தமிழ்த்தேசிய போராளிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் நீண்டகால பரோலில் விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply