தூங்கா நகரின் தொன்மை அழிக்கப்படுகிறது – தமுக்கம் காப்போம்

தூங்கா நகரின் தொன்மை அழிக்கப்படுகிறது

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரலாற்று அடையாளமான தமுக்கம் மைதானத்தை இடித்துவிட்டு நவீன மால், வாகன காப்பகம் போன்று வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

மதுரை வரலாற்றின் பல்வேறு அரசியல் எழுச்சி கூட்டங்களையும் மாநாடுகளையும் இளையோர் எழுச்சியின் மையமாகவும் இருந்தது தமுக்கம் மைதானம்.

பெரியார் அண்ணா தொடங்கி நிகழ்கால அரசியல் மற்றும் புத்தக கண்காட்சி வரை பெருமக்கள்திரள் ஒன்றுகூடும் ஒரு இடத்தை தனியார் கார்ப்ரேட்டுக்கு தாரை வார்ப்பேதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பண்பாட்டு ரீதியாக சித்திரை திருவிழாவின் மிகமுக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடத்தை மாற்றி வேறொரு இடத்திற்கு மாற்றியமைப்பதை உடனே அரசும் மாநகராட்சி நிர்வாகமும் கைவிட வேண்டும்.

மதுரை மாவட்ட மக்களின் உணர்வோடும் அரசியலோடும் கலந்த தமுக்கத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே..!

#தமுக்கம்_காப்போம்

Leave a Reply