திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தமிழகத்தில் CAA, NRC, NPR கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி முத்துப்பேட்டை ஷாஹீன்பாக் என்னும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தின் 16-வது நாளான 01-03-20 அன்று மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு போராடிவரும் மக்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply